| ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு:விண்ணப்பங்களை ஜுலை 19 முதல் 28 வரை சமர்ப்பிக்கலாம்
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்
20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
|
| ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்- இணை இயக்குனர்
கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலந்தாய்வுக்கு, தலைமை தாங்கிய இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி குறைவிற்கான காரணம், தேர்ச்சி சதவீதத்தை மேற்கொண்டுள்ள நடவடிக்கை, கடந்த 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெற்ற கற்றல், கற்பித்தல் பணி விபரம், நடத்திய தேர்வுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண், தலைமை ஆசிரியர் மேற்கொண்ட வகுப்பறை கூர்ந்தாய்வு, |
| அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தேவைப்படும் பணியிடம் குறித்தும், விரைவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம், சில பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு கூடுதலாக துவக்கும் நிலை இருப்பின் கூடுதல் ஆசிரியர் தேவை விபரம் |
| தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?
100 சதவீத தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை படிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். தேர்ச்சி காண்பிக்கவில்லை என்றால் வேறு பள்ளிகளுக்கு மாற்றம், விளக்கம் கொண்டுக்க வேண்டிய கட்டாயம் போன்ற பல இடர்பாடுகளை தலைமை ஆசிரியரும், பாட ஆசிரியர்களும் சந்திக்கின்றனர் |
| CPS,GPF மற்றும் ECS தகவல்களை பெற ஆண்ட்ராய்டு செயலி
This is a new android app for tetting the CPS, GPF particulars through online. There are lakhs of Govt Employees through out Tamilnadu which includes teachers and govt staff. Now-a-days the CPS ( Contributory Pension Scheme ) is followed. The details about CPS and GPF are comuterised by the Government. So this app is very useful to get the Account Slip, CPS missing credit details, and to know the missing credit details by simply entering our number and particulars. |
| மூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி என்ன?
அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க, அரசு 2 விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம். ஒன்று, அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால் ஒருவர் கட்டாயம் 5-ம் வகுப்பு வரையாவது, அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தலாம். |
| அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்த பாரதிராஜா
மாநிலத்தில் முதலிடம் பெற்ற 41 பேரில் தமிழ் வழியில் பயின்றவர் பாரதிராஜா மட்டுமே. மேலும், அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 3 பேரில் பாரதிராஜாவும் ஒருவர்.
மாணவர் பாரதிராஜாவின் பெற்றோர் சேகர்- கவிதா. விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். |
| மே 7-ல் பிளஸ் 2, மே 21-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
''பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது'' என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார். |
| எந்த வகையில் நியாயம்?.தினமணி தலையங்கம்
ஒர் அரசு ஊழியர் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இப்படி இருக்கும்போது, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டாலே போதுமானது அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு என்றால், அது எந்த வகையில் நியாயம்? |
| 'ஜாக்டோ, ஜாக்டா' தனித்தனி போராட்டம் அறிவிப்பு .
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், கடந்த, 8ம் தேதி பேரணி நடந்தது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, |
| வேதியியல் வினாத்தாளில் இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை
தமிழ் வழி புத்தகத்தில் பக்கம் 176ல் உள்ள சான்று கணக்கு 6 லிருந்து இவ்வினா எடுக்கபட்டிருப்பதால் அமைப்பின் என்ரோபி மாற்ற மதிப்பு -0.2287JK-1 என குறிப்பிட பட்டிருக்க வேண்டும் . ஈயத்தின் மதிப்பு 206 என்று இருப்பதற்கு பதிலாக 208 என வழங்கப்பட்டுள்ளது. |
| பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்
10 மதிப்பெண் பிரிவில் 58–வது வினாவில் கழித்தல் குறியீடு போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.
வினாத்தாளை பார்த்ததும் 58–வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை அளிக்கலாமா? |
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடங்கப்பட உள்ளன. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் 66 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மார்ச் 31-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தேர்வு முடிவதற்கு முன்னதாகவே தொடங்குவதால், ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, |
|
| ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?
வருமான வரி உச்சவரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் 4.4 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல் வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். |
| மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?
ஒரு பயிர் ஒரு மண்ணில் விளைய பல்வேறு காரணிகள் உள்ளது. பயிர் விளைச்சளைத் தரவில்லை எனில் விவசாயி மட்டும்தான் காரணமா? மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்கள் காரணமா? பயிர் விளைய பருவமழை, மண்ணின் தன்மை, பயிர் செய்த காலம், பராமரிப்பு, நல்ல விதை போன்ற பல காரணிகள் உள்ளது |
| ஆசிரியர்களுக்கு வரிசலுகை -சலுகையல்ல, அங்கீகாரம்...தினமணி கட்டுரை
அதுபோல ஆசிரியர்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டால், அது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தானே? இதைச் செய்வதால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடப் போவதில்லை.
ஆசிரியர் துறையில் அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆசிரியராக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது. நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்? |
| முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் - (கடிதஇலக்கியம்)
மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக மாற்றப்படும் இன்றைய மாணவர்கள் நாளை பணத்தை எண்ணும் எந்திரங்களாகத்தானே மாறுவார்கள்? எனவே, படிக்கும் காலத்தில் வாழ்வின் விழுமியங்களைக் கற்றுக்கொள், மதிப்பெண்ணுடன் இதுவும் |
| ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வுஅரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை
ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தும் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களால் பணியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது |
| ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாநில அளவில் போராட்டம்
2004 மற்றும் 2006ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை ஏற்படுத்திட வேண்டும். 2003ல் கொண்டு வந்த தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை மாற்றியமைத்து பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவதும், |
| தீருமா தேர்வுகால குழப்பங்கள்?-தினமணி கட்டுரை
காலை 9 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டுமானால், வீட்டிலிருந்து அவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்
|
| ஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
|
| தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீடு:100% இலக்கை எட்ட -மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் (2014-15) 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டுள்ளார்.
|
| CPS விவரம் :இனி தகவல் மையம் பராமரிக்கும்
இனி அரசு பங்களிப்பு ஓய்வூ திய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும், சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை 600025 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
|
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் -தேர்வுத்துறை உத்தரவு
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், விலங்கியல், தாவரவியல் போன்ற முக்கிய பாடங்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, சீனியர் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டாம். ஜுனியர் ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.-
|
| பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திருத்துறைப்பூண்டி வட்ட நிர்வாகிகள் தேர்தல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்தல் ஆணையாளராக மாவட்ட துணை தலைவர் சுந்தரமூர்த்தி பணியாற்றினார்.இதில் வட்ட தலைவராக சிங்காரவேலு, துணைத் தலைவர்களாக செல்வகுமார், செந்தில்குமாரன், வட்ட செயலாளராக வடிவேல், இணை செயலாளர்களாக ரமேஷ்குமார், ஜோசப் இமானுவேல்,
|
| அரசு ஊழியர் துறைத் தேர்வு முடிவு வெளியீடு
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக ஆண்டுதோறும் மே, டிசம்பர் மாதங்களில் துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் இந்த துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற முடியும்.
|
| மருத்துவ காப்பீட்டு வசதி கொண்ட 25 ஆயிரம் மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியீடு
மருத்துவ காப்பீட்டு வசதி கொண்ட 25 ஆயிரம் மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
|
| எஸ்.எம்.எஸ். மூலம் மாதிரி வினாக்களைப் பெறும் வசதி அறிமுகம்
இந்த சேவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்களைப் பெறலாம்.
|
| மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதி, வார வேலை நாளான திங்கள்கிழமையன்று வருகிறது. இதை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால், மே இறுதியில் உள்ள ஞாயிற்றுக்கிழமைக்கு தேர்வை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
|
| முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முதுகலை பட்டம் பெற்ற பின்னர், 12–ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
|
| பட்டப்படிப்புக்கு பின் +2 படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களா? உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு
பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு ஒருவர் +2 தேர்ச்சி பெற்றாலும் கூட தமிழக அரசின் அரசாணைப்படி அது ஏற்புடையதே ஆகும். அதாவது முன்னர் படிக்க வேண்டியதை பின்னர் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், அது பிரச்சினை ஆகாது
|
| தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
|
| யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள
|
| பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :OMR தாளில் Shade செய்ய பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்.
சென்ற ஆண்டு வரை பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்தனர் .ஆனால் இந்த ஆண்டு முதல் OMR தாளில் வட்டங்களில் Shade செய்ய வேண்டிய பகுதிகள்
|
| தேர்தல் கமிஷனிடம் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரிக்கை
தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.
|
| தகுதி தேர்வில் விலக்கு அறிவித்தும் ,தகுதிகான் பருவம் முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (SR) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
|
| எந்த கட்சிக்கு ஆதரவு?
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்
|
| பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
|
| பிளஸ் 2 கணிதம் :தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க தேர்வு துறை உத்தரவு
பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், விடையளிக்க முற்பட்டிருந்தால் அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
|
| வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு முப்பருவ தேர்வு முறை இல்லை
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
|
| ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி - முழு விவரம்
ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .
|
| தேர்தல் பணி: பெண்களுக்கு சலுகை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: ஊனம், உடல் நிலை, கர்ப்பிணி உள்ளிட்ட காரணங்களுக்காக சிலருக்கு தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும்.
|
| பிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்க கோரிக்கை
6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
| தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிஎன்பிஎஸ்சி-யை கட்டுப்படுத்தாது
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே, பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரி தெரிவித்தார்
|
| தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது .
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது
|
| நாடாளுமன்ற தேர்தல்-துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வேலை நாட்களில் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், தேர்தல் வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படும் என்பதாலும், ஆசிரியர்களும் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதாலும், அடுத்த மாதம் ஏப்ரல் 23 முதல் 25ம் தேதி வரை
|
| 652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்
தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
|
ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித் துறைஉத்தரவு
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்
|
|
பிளஸ்-2 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் இருந்து 10-ம் வகுப்பு ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசு, மாவட்ட பொருளாளர் முத்துவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் கருணாகாளிதாசன்
|
|
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிமார்ச் 21ல் துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 21ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
|
|
ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் -ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
டிட்டோஜாக்குடன் இணைந்த 6 சங்கங்கள் மட்டும் அல்லாமல், பல்கலைக் கழகம் வரை ஆசிரியர் இயக்கங்கள் இணைந்து �ஜாக்டி� நடத்தும் அதிரடி பேராட்டமாக விஸ்வரூபம் எடுக்கவும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன
|
|
தேர்தல் பணியாற்ற கட்டாயபடுத்தகூடாது -மாற்று திறனாளிகள் கோரிக்கை
மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய ஆணையரகம் கேட்டுக் கொண்டதன்படி, தேர்தல் பணிகளில் மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்துவதை கூடியமட்டும் தவிர்க்க தலைமை தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த 1998-ஆம்
|
|
தகுதித்தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பி. அவசர கடிதம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்
|
|
NTSE -2013 தேர்வு முடிவுகள் வெளியீடு
நவம்பர் 2013 ல் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறானாய்வு தேர்வு முடிவுகள் http://www.tndge.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு நிலை -2 தேர்வு எழுத
|
|
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இன்று (மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி .
|
|
தேர்வுப் பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டது-அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன்
இந்த ஆண்டு தேர்வின்போது வேலைப்பளுவையும், தவறுகளையும் குறைப்பதற்காக புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், தேர்வுப் பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.
|
|
"டெட்' தேர்வு: பணி நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
|
|
53 லேப்டாப்கள் திருட்டு-ரூ 8.5 லட்சம் கட்ட பள்ளிகல்வி துறை உத்தரவு -மதுரை உயர் நீதிமன்றத்தை நாடினார் தலைமை ஆசிரியை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ம் தேதிகாலை சுமார் 4.30 மணியளவில் 53 லேப் டாப்கள் திருடபட் டிருந்தது.இது தொடர்பாக அன்றையதினமே .
|
|
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கும் கட்சிக்கே வாக்கு-அரசு பணியாளர் சங்க தலைவர் பேட்டி
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கும் கட்சிக்கே மக்களவை தேர்தலில் வாக்களிப்போம் என அரசுப் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது .
|
|
+2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
+ 2 விடைத்தாள் திருத்த முன்பு மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் இருந்தது .இந்த வருடம் கல்வி மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள் ளது |
|
துறை தேர்வுகள் மே -2014 அறிவிப்பு. விண்ணபிக்க இறுதி தேதி -31.03.2014
Applications are invited from candidates THROUGH “ONLINE” ONLY for admission to the Departmental Examinations to be held in May-2014
Name of the Examination: Departmental Examination - May 2014
Date of Notification : 01.03.2014
Date & time of closing : 31.03.2014 5.45 PM |
|
அடிப்படை சம்பளத்துடன் டிஏ இணைப்பு 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள விகிதம் பரிந்துரை செய்ய 7 வது சம்பள கமிஷன் அண்மையில் நியமிக்கப்பட்டது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7 வது சம்பள கமிஷன் முடிவு எடுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது |
|
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘நம்பிக்கை - 2014’ இலவச புத்தகம்
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் தரும் இலவச வினாத்தாள் புத்தகங்களில், தங்களின் பிரச்சார வாசகங்களையும் இடம்பெறச்செய்து, வீட்டிலுள்ள வாக்காளர்களைக் கவரும் முயற்சியைத் தொடங்கியுள்ளது புதுவை காங்கிரஸ். |
|
ஆறாவது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு .
அரசு அதிகாரிகள் ஊதிய நிர்ணய குறைபாடுகள் பற்றிய ஆராய தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும். சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தியை குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் |
|
மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆகிறது?-அமைச்சரவை கூட்டத்தில் நாளை முடிவு
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. |
|
2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–தேர்வில் தோல்வி
நான் பி.எஸ்சி. (வேதியியல்) மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். |
|
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்
ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், |
|
ப்ளஸ் 2 தேர்வு :விடைத்தாள் எடுத்து வர புதிய முறை
கடந்த ஆண்டு பொது தேர்வு விடைத்தாள்கள் தொலைந்து போன சம்பவங்கள் நிகழ்ந்ததால் இந்த ஆண்டு விடைத்தாள்களை தபால் துறைக்கு பதிலாக பள்ளி கல்வித்துறை வாககனம் மூலமே எடுத்து செல்ல முடிவு செய்யப் பட்டுள்ளது . |
|
சிறப்பு டி.இ.டிவிவகாரம் .புதிய அரசானை வெளியீடு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது |
|
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண் காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பழனிச்சாமி திருநெல்வேலி, செ.கார்மேகம் திருவண்ணாமலை, எஸ்.உமா நாமக்கல், என்.லதா பெரம்பலூர், சி.செல்வராஜ் தஞ்சாவூர், திருவாரூர், வி.பாலமுருகன் தர்மபுரி, சி.உஷாராணி கரூர், பி.குப்புசாமி தூத்துக்குடி, |
|
8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 |
|
இரவு நேரங்களில் மின்தடை கூடாது -மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை
ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் சேது வருவதால் இரவு நேரங்களில் மின்தடை கூடாது என மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. |
|
புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் நியமனம்
தமிழ்-16, ஆங்கிலம்-74, கணிதம்-27, அறிவியல்-14, சமூக அறிவியல்-21 (மொத்தம் 152 பேர்).பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், மாவட்ட தலைமையிடங்களில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவல கத்துக்கு சென்று, |
|
அரசு பாலிடெக்னிக்: விரைவில் 600 விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 600 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளி யாகிறது. |
|
10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில் |
|
டிஏவை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. |
|
ஆசிரியர்களுக்கென புதிய ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் வெளியீடு
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6 ஆயிரத்து 917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன. அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது |
|
செய்முறை தேர்வில் ரசாயனத்தை உறிஞ்சிய பிளஸ் 2 மாணவி சாவு
ரசாயனமும் சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரு கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அகிலாண்டேஸ்வரி இறந்தார் |
|
முதுகலை ஆசிரியர் 583 பேருக்கு இன்று (19/2/2014) பணி நியமன உத்தரவு வழங்கபடுகிறது .
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த 2895 முதுகலை ஆசிரியர்களில் 583 தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் இன்று பணி நியமன உத்தரவு வழங்கபடுகிறது .தலைமை செயலகத்தில் இன்று நட க்கும் விழாவில் |
|
ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு விடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண் மேலும் பொதுத்தேர்வு ,ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர்தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் |
|
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு
விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. |
|
பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு
பார்வையற்ற பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் அலுவல கங்களில் வழங்கப்படும். |
|
10, +2 மாணவர்களுக்கு புதிய வழிகாட்டி கையேடு -இணையதளத்தில் வெளியீடு
பொது தேர்வு எழுத உள்ள 10 மற்றும் +2 மாணவர்களுக்கு அனைத்து பாடம்களுக்கான வழிகாட்டி கையேடு பள்ளிகல்வி துறையால் தயாரிக்கப்பட்டு http://ecs.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . |