எஸ்ஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைகிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வு இன்றுடன் (புதன்கிழமை) முடிகிறது. விடைத்தாள் மதிப்பீடு நாளை தொடங்குகிறது. எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. தனித்தேர்வர்கள் உள்பட 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். இன்று (புதன்கிழமை) நடக்கும் சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிகிறது. அதன்பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும். எஸ்எஸ்எல்சி முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் பிளஸ் 2 வகுப்பில் சேர்வார்கள். சிலர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பட்டயப் படிப்பிலும், இன்னும் சிலர் ஐ.டி.ஐ.க்களில் தொழிற்பயிற்சியிலும் சேர்வது வழக்கம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.