ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 7&
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளர், மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து, ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளோம். இந்நிலையில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை பெற்றால் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார். அதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை.
டிட்டோஜாக் பொதுக்குழு கூடி இறுதிக் கட்டபோராட்ட திட்டத்தை வகுத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அரசே இயங்க முடியாத அளவுக்கு போராட்டத்தை வலிமையோடு நடத்தும்.
டிட்டோஜாக்குடன் இணைந்த 6 சங்கங்கள் மட்டும் அல்லாமல், பல்கலைக் கழகம் வரை ஆசிரியர் இயக்கங்கள் இணைந்து �ஜாக்டி� நடத்தும் அதிரடி பேராட்டமாக விஸ்வரூபம் எடுக்கவும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.