பி.ஏ., ஆங்கிலம் (தொழில்சார் கல்வி) பட்டம் பெற்றவர்கள், டி.ஆர்.பி., தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றபோது, இந்த பட்டப்படிப்பை டி.ஆர்.பி., நிராகரித்தது.

காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி,திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வழங்கிய பட்டப்படிப்பு ஏற்கப்படாததால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும்,வேலை கிடைக்காத மாணவிகள், பல்கலை., முன் கூடி போரட்டம் நடத்தினர். மேற்கண்ட கல்லூரிகளில்,பி.ஏ., ஆங்கிலம் (தொழில்சார் கல்வி) பட்டம் பெற்றவர்கள், கடந்த மாதம் அக்.14ல் நடந்த டி.ஆர்.பி., தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றபோது, இந்த பட்டப்படிப்பை டி.ஆர்.பி., நிராகரித்தது. இப்படிப்பை பயின்ற மாணவிகள் இன்று பல்கலை., முன்பு போராட்டம் நடத்தினர்.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: பி.ஏ., ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் தொழில்சார் கல்வியும் ஒன்று தான் என பல்கலை கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது. டி.ஆர்.பி., அதிகாரிகள் நிராகரித்து,அரசு ஆணை கேட்கின்றனர். வேலை கிடைக்கும் வரை தினமும் பல்கலைக்கு வருவோம், என்றனர்.பதிவாளர் மாணிக்கவாசகம் கூறியதாவது: கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில், உயர்கல்வி மன்றத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பரிந்துரை செய்து, இன்னும் இரண்டு நாட்களுக்குள்,மாநில உயர்கல்வி துறைக்கு அனுப்புவதாகவும், ஏற்கனவே உள்ள 36 பாடங்களுடன்,இதற்கும் அனுமதி அளிப்பதாக கூறியுள்ளனர்,என்றார்.மதியம் வரை மாணவர்கள் பல்கலை நுழைவு வாயிலின் முன்பு பெற்றோருடன் காத்திருந்தனர்.