அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு .


அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு .


அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான், அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.