தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கணினி பயிற்றுநர்களின் பணியிடங்கள் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கணினி பயிற்றுநர்களின் பணியிடங்கள் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தில் தற்காலிகமாக 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பணியிடங்கள் 30.6.2012ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் பணியிடங்களை 1.7.2012ம் தேதி முதல் 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவிட பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார். அதன்படி திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 1.7.2012 முதல்5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது