samacheer prac

செய்முறை தேர்வுக்காக 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்தில் இயற்பியியல், வேதியியல், உயிரியல் என 3 பிரிவுகள் உள்ளன.
இயற்பியல் பிரிவு செய்முறை தேர்வுக்கு 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சூத்திரத்துக்கு 2 மதிப்பெண்களும், அட்டவணை, அளவீடு, கணக்கீடுகளுக்கு 5 மதிப்பெண்களும், செய்முறை, முடிவுக்கு 2 மதிப்பெண்களும் மொத்தம் 9 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் செய்முறை தேர்வுக்கு 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அமில மூலத்திற்கான முறையான பகுப்பாய்வு செய்முறைக்கு 4 மதிப்பெண்கள், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு 2 மதிப்பெண்கள், முடிவுக்கு ஒரு மதிப்பெண், பிற சோதனைகள் (வடிகட்டுதல், தெளிய வைத்தல், இறுத்தல், ஸ்டார்ச் கூழ்மம் தயாரித்தல்), உபகரணங்கள் கையாளுதலுக்கு (பியூரெட், பிப்பெட்) 2 மதிப்பெண்கள் என மொத்தம் 9 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
உயிரியல் பிரிவு செய்முறை தேர்விற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கண்டறிதலுக்கு ஒரு மதிப்பெண்ணும், பாகங்களுடன் கூடிய வரைபடத்துக்கு 2 மதிப்பெண், காரணங்களுக்கு 4 மதிப்பெண்கள் என மொத்தம் 7 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரியல் பிரிவில் தாவரவியலுக்கு ஸ்லைடு வைக்கப்பட்டால், விலங்கியலில் கண்டிப்பாக ஸ்பெசிமன் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.