10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து dt 17-02-2011

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.   மத்திய, மாநில அரசுகளின் கல்வி அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. தேர்வுகளில் மாற்றங்கள் முறைகள், கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டன. இதற்கான மத்திய அரசு ஒரு குழுவை உருவாக்கி அக்குழுவின் பரிந்துரைகளை பெற்றுள்ளது.
அதில் முக்கியமான பரிந்துரை மாநில பாடத்திட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கம் செய்வதாகும். முன்பு பள்ளிக்கல்வி 10-ம் வகுப்பு வரை முடிந்து விடும். அதனையடுத்து கல்லூரி படிப்பு தொடரும். ஆனால் இப்போது அப்படி அல்ல. 10-ம் வகுப்புக்கு பின்னர் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகள் அதே பள்ளியில் படித்து விட்டு மேல் படிப்புக்கு கல்லூரிக்கு செல்கின்ற நிலை உள்ளது.
அதனால் கல்லூரி படிப்பிற்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒன்று மட்டுமே போதுமானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை. அதனால் அவற்றை ஏன் நீக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இரண்டு பொதுத் தேர்வை சந்திப்பதால் அதிகமன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மாணவர்களை படிக்க சொல்லி பெற்றோர்களும், ஆசிரியர்களும் தொந்தரவு செய்வதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.