Tips for dept exam account test

 

Tips for The Account Test For Subordinate Officers Part-I Exam(176)
  • குறைந்தபட்சம் 45மதிப்பெண்களுக்கு கணக்குகள் கேட்கப்படும்
  • இதில் 20 மதிப்பெண்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடும்(Pension Calculation) வினாவும் ,
  • 20 மதிப்பெண்களுக்கு பயண படி (TTA) கணக்கிடுதல் ,ஊதிய நிர்ணயம் செய்தல் (Pay fixtation) கணக்கிடுதல்,
  • மீதமுள்ள 5 மதிப்பெண்களுக்கு பணி ஏற்பிடை காலம் (Joining Time) கணக்கிடுதல் போன்ற வற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் .
  • மேற்கண்ட கணக்குகளை நன்றாக பயிற்சி செய்துகொள்ளவேண்டும்.
  • தேர்வில் முதலில் இந்த கணக்குகளை தெளிவாக போட்டுவிடவேண்டும். நிச்சயம் வெற்றி கிட்டும்15 மதிப்பெண்களுக்கு சிறு குறிப்பு வரைக வினாக்கள் 5 இடம் பெற்று இருக்கும் .
  • இவற்றிற்கு புத்தகங்களை பார்த்து விடை அளிக்க வேண்டும் .புத்தகங்களை தேர்வு அறையில் ஒருவராவது (கருவூல பணியாளர்கள் ) கொண்டு வந்திருப்பார்கள் . Guide அனுமதி இல்லை ஆனால் வைத்து கொள்ளுங்கள் சில சமயங்களில் துணை புரியும் .
  • புத்தகத்தை பார்த்து விடை எழுதும் போது விடை இடம்பெற்று உள்ள Paragraph Number ,Page No ,Title of the book மறக்காமல் குறிப்பிடவேண்டும்.
  • அப்புறமென்ன .. முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள்
Tips for The Account Test For Executive officer (114)

  • இதில் ஓய்வூதியம் கணக்கிடும்(Pension Calculation) கணக்கு ( 12 marks) மட்டுமே கேட்கப்படும்.
  • மீதமுள்ள வினாக்களுக்கு புத்தகங்களை பார்த்து விடை அளிக்க வேண்டும் ,
  • புத்தகத்தை பார்த்து விடை எழுதும் போது விடை இடம்பெற்று உள்ள Paragraph Number ,Page No ,Title of the book மறக்காமல் குறிப்பிடவேண்டும்.